ஸ்ரீவில்லிபுத்தூரில் வளநாட்டின் கலை இலக்கிய பெருவிழா. அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி ரோட்டில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான போட்டிகள் "மல்லிவளநாட்டின் கலை இலக்கிய பெருவிழா" என்ற பெயரில் நடைபெற்றது.
இப்போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, சிலம்பப் போட்டி மற்றும் நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தமிழர்களின் பெருமைகளை உலகிற்குப் பறைசாற்றக்கூடிய பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடைபெற்ற போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரி தட்டிச் சென்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.