விருதுநகர்: இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலி

55பார்த்தது
விருதுநகரில் நடந்த இருவேறு விபத்துகளில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகன் தினேஷ்குமார் (வயது 21). இவர் தனியார் ஓட்டலில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை எதிரே மதுரை நான்கு வழிச்சாலையில் சத்திர ரெட்டியபட்டி நோக்கி சென்றபோது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 

இதேபோன்று மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் சுகுமார் (25). நேற்று முன்தினம் சித்தூர் சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றார். இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று இவர் இறந்த நிலையில் ஆவல்சூரன்பட்டி அருகே உள்ள கால்வாய் ஒன்றின் உள்ளே மோட்டார் சைக்கிள் உடன் இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் சுகுமார் அந்தப் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரில் மோதி உள்ளே விழுந்து இறந்தது தெரிய வந்தது. இந்த இரு விபத்துக்கள் குறித்தும் விருதுநகர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி