பசுமைத் தாயகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்சி

60பார்த்தது
*விருதுநகரில்பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் பசுமைத் தாயகம் சார்பில்நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்சி - ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு. *

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமான தேவை ஆகும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொது நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தியும். இதற்காக கடந்த 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட சதுப்பு நில விதிகளின் கீழ் தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் , வருகின்ற 29ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள அனைத்து கிராமசபைக் கூட்டத்தில் இது சம்மந்தமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும்

இன்று விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமா ப்பட்டி கிராமத்தில் உள்ள விராக சமுத்திரம் கண்மாய் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளர் கர்ண மகாராஜா முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

பேட்டி: கர்ண மகாராஜா - மாநில துணைப் பொதுச் செயலாளர் (பசுமைத் தாயகம்)

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி