விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர்களுக்கான மாபெரும் கபடி மற்றும் கையுந்து போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 29.03.2025 முதல் 04.04.2025 வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஆண்களுக்கு வட்டார அளவிலும், பெண்களுக்கு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கையுந்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9994160149 மற்றும் 9894693210 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
வட்டார அளவில் நடத்தப்படும் ஆண்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ. 10,000-மும், இரண்டாம் பரிசு ரூ. 5,000-மும் வழங்கப்படும். வட்டார அளவில் வெற்றி பெறும் தலா ஒரு அணிகள் 12.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் வயது சான்று அல்லது ஆதார் கார்டு நகலுடன் படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், கேட்டுக்கொண்டுள்ளார்.