ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஶ்ரீவில்லிபுத்தூர்: திருக்கல்யாண திருவிழா தொடக்கம்....

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா ஏப்ரல் 4 இன்று காலை 11.30 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தளங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து பங்குனி உத்திரம் நாளில் ரெங்கமன்னாரை மணம் புரிந்தார் என்பது வரலாறு.  அதனால் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருக்கல்யாண திருவிழா இன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய தம்பதியினர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, 13 நாட்கள் நடைபெறும் இத்திருக்கல்யாண திருவிழாவில் தினசரி பல்வேறு வாகனங்களில் ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவையும், ஏப்ரல் 11-ம் தேதி காலை செப்புத்தெரோட்டம் மாலை ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

வீடியோஸ்


விருதுநகர்
345 பணியிடங்கள்.. ரூ.60,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை
Apr 03, 2025, 13:04 IST/

345 பணியிடங்கள்.. ரூ.60,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை

Apr 03, 2025, 13:04 IST
சென்னை மாநகராட்சியில் மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. * காலிப்பணியிடங்கள்: 345 * கல்வி தகுதி: 8ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Intellectual Disability / Occupational Therapy / Master of Social Work / Laboratory Technician / DGNM or B.Sc.,Nursing / MBBS * வயது வரம்பு: கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும் * ஊதிய விவரம்: ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை * தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு * கடைசி தேதி: 11.04.2025 * மேலும் விவரங்களுக்கு: https://chennaicorporation.gov.in/gcc/