அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பணம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்திற்கு உடனடியாக பணத்தை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி