பரனூரில் ஏரிக்கரை பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு

58பார்த்தது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெஞ்சல் புயல் காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் விழுப்புரம் மாவட்டத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரனூர், அருமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தின் காரணமாக அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவு எட்டி, கோடி வாய்க்கால் வழியாக நீர் வெளியேறியது. அதிகப்படியான நீர் வெளியேறியதால் கோடி வாய்க்கால் கரை உடைந்து சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த, அமைச்சர் பொன்முடி அந்த பகுதிகளில் உடனடியாக வாய்க்கால் சரிசெய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், இன்று முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான பொன். கௌதம சிகாமணி ஏமப்பேர், அருமலை, புத்தூர், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் அடித்துச் செல்லப்பட்ட வாய்க்கால்களை சீரமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் இழப்புக்கள் குறித்து கேட்டிருந்தார். உடனடியாக அந்த பகுதிகளுக்கு அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என அவர் உத்தரவாதம் அளித்தார். இந்த நிகழ்வின் போது, அவருடன் விழுப்புரம் மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி