அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளனர். தமிழிசை சௌந்தரராஜன், நடிகை ராதிகா, நடிகை குஷ்பூ, விஜய தரணி உள்ளிட்ட பாஜக மகளிர் அணியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்தனர். மேலும், அவர்கள் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.