விழுப்புரத்தில் மறியல்; 100 பேர் மீது வழக்கு

62பார்த்தது
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயும், நிவாரண பொருட்கள் கூடுதலாகவும் வழங்க வேண்டுமென அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அய்யாக்கண்ணு மற்றும் 69 ஆண்கள், 30 பெண்கள் என 100 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி