விழுப்புரம்: குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி ஆட்சியர் தகவல்

53பார்த்தது
விழுப்புரம்: குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி ஆட்சியர் தகவல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக, முன்னணிப் பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர், மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர், மாணவிகளுக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளது. 21 வயது முதல் 32 வயது வரையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர், மாணவிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையும் தாட்கோ மூலம் வழங்கப்படும். 

இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர், மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி