விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஸ்ரீபதி, 34; இவர், கடந்த 15ம் தேதி விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில், ஊழியர்கள் வாகன நிறுத்த பகுதியில் தனது பஜாஜ் சி. டி. , 100 பைக்கை நிறுத்திவிட்டு, வெளியூர் சென்றிருந்தார். மறுநாள் வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.