திருக்கோவிலூர் - Tirukoilur

பெண் வார்டு உறுப்பினரை அடிக்க பாய்ந்த ஊராட்சி மன்ற தலைவர்

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் அஞ்சுகம். இவர் பஞ்சாயத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆகியோருக்கு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இருவருக்கும் ஏற்பட்ட வார்த்தை போரில் செருப்பை கழட்டி கற்களால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

வீடியோஸ்


விழுப்புரம்
யுனெஸ்கோ குழு செஞ்சி கோட்டைக்கு வருகை குறித்து ஆலோசனை
Sep 13, 2024, 15:09 IST/செஞ்சி
செஞ்சி

யுனெஸ்கோ குழு செஞ்சி கோட்டைக்கு வருகை குறித்து ஆலோசனை

Sep 13, 2024, 15:09 IST
செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. யுனெஸ்கோ குழவினர் செஞ்சி கோட்டையை பார்வையிட வரும் 27ம் தேதி வர உள்ளனர். இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் இன்று(செப்.13) நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் பழனி தெரிவித்ததாவது: செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அங்கீகரிப்பது தொடர்பாக வரும் 27 ம் தேதி யுனஸ்கோ குழுவினர் செஞ்சி கோட்டைக்கு வருகை புரியவுள்ளனர். அப்போது ராஜாதேசிங்கின் வம்சாவழியினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும், செஞ்சிக்கோட்டையில் நடந்து வரும் சாலைப்பணிகளை 20ம் தேதிக்குள் நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழுவினர் ஆய்வு செய்யும் நாளில் தற்காலிக கழிவறை வசதியினை ஏற்படுத்துவது, தொல்லியல்துறை மற்றும் பேரூராட்சி மூலம், கோட்டையினை சுற்றியுள்ள தனியார் இடங்களில் முட்புதர்கள், முட்செடிகளை அகற்றுவது, செஞ்சிக்கோட்டையின் வரலாற்று சிறப்புகள் குறித்த குறும்படம் தயார் செய்து யுனஸ்கோ குழுவினருக்கு திரையிட்டு காண்பிப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.