திருக்கோவிலூர்: அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு

61பார்த்தது
திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் கல்வித் திறன் குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண், அவர்களுக்கு கல்லியில் உள்ள சிக்கல்கள் குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

வகுப்பு மாணவர்கள் முன்னிலையில், பெற்றோர்களிடம் வகுப்பு ஆசிரியர்கள், மதிப்பெண் சான்றிதழை வழங்கினர். மாணவர்களின் கவனக்குறைவு மற்றும் பெற்றோர்களின் கண்காணிப்பு, ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து ஒவ்வொரு பெற்றோர்களிடமும் விவாதிக்கப்பட்டது. அரசுப் பள்ளியில் இதுபோன்று நடத்தப்படும் பெற்றோர்கள், ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி