வேலூர்: 31ஆண்டுகள் அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளது கேசிபி பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளது வேறு எந்த கட்சியும் அதிமுகவை போல் ஆட்சி நடத்தியதில்லை என உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். இதில் அதிமுக முன்னால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நகர செயலாளர் சதாசிவம் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த இறுதியில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.