வாணியம்பாடி அருகே சாலை வசதியற்ற மலை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு. சுதந்திரம் பெற்ற நாள் முதல் சாலை வசதி கோரும் மலை கிராம மக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நெக்னாமலை கிராமத்தில் வசித்து வரும் 160 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் சுதந்திரம் பெற்ற நாள் முதல் தங்களின் மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி போராடி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையின் அனுமதி பெற்று தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் இச்சாலை மழைக்காலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுவதால் மலை கிராமத்து மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் மலைக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கட்டிடத்தில் பகுதி நேர நியாய விலை கடையை இன்று மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த கடையின் மூலம் 160 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடையில் வழங்கப்படும் பொருட்கள் இனி வரும் காலங்களில் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.