வாணியம்பாடியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால்
குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சம். புகார் அளித்தும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று பொதுமக்கள் வேதனை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன், தேச மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் ஆபத்து ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.