துக்க வீட்டில் திருட முயன்ற நபருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்!

57பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் வெங்கடேசன் என்பவரது தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்துள்ளார். பின்பு நைசாக வீட்டுக்குள் நுழைந்து பீரோவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவன் முன்னுக்குப் பின் முரணாக கூறியுள்ளான்.

இதனையடுத்து சந்தேகம் அடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் அவரை பிடித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவன் பெங்களூர் பகுதியை சேர்ந்த முனிராஜு (35) என்பதும் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து, இதுபோன்ற துக்க வீடுகளில் கலந்து கொண்டு இறுதிச் சடங்கு செய்யும் நேரத்தில் உள்ளே புகுந்து நகைகளை திருடி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவன் மீது கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிழுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து முனிராஜை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி