வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்பாடி சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ( செப்டம்பர் 11) ஒரே இருசக்கர வாகனத்தில் ஐந்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சாகசம் செய்தவாறு சென்றுள்ளனர்.
இதனை அந்த வழியாக சென்ற சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் தற்போது வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகனத்தில் சென்ற ஐந்து மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் மற்றும் குடியாத்தம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.