வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்னராயன்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நரேந்திரநாத் என்பவர் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இருவரும் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் புங்கணூருக்கு நேற்று மாலை குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
இதனிடையே அருகே உள்ள அவரது வீட்டு உரிமையாளர் இன்று காலை பார்த்த போது நரேந்திரநாத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் இது குறித்து நரேந்திரநாத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து நரேந்திரநாத் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகை 50 கிராம் வெள்ளி பத்தாயிரம் ரூபாய ரொக்கம் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும் சமையலறையில் பானையில் கேஸ் ஸ்டவ்வையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நரேந்திரநாத் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.