இரவில் திடீர் ஆய்வு : அமைச்சர் துரைமுருகன் அதிரடி !

73பார்த்தது
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் 43.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாளையாத்தம் முதல் சேம்பள்ளி ரோடு வரை கவுண்டன்யா மகாநதி ஆற்றின் வலது கரை மேல் புதிதாக அமைக்கப்பட்ட மின் விளக்குகளுடன் கூடிய சாலை மற்றும் கெங்கை அம்மன் கோவில் அருகில் கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் ஆகியவை இன்று (செப்.13) மாலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடக்கி வைத்து திறப்பு விழா பேருரை வழங்க இருக்கிறார்.

இதனிடையே நேற்று (செப்.12) இரவு 10 மணி அளவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கவுண்டன்ய ஆற்றங்கரை தரை மேல் அமைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் கெங்கை அம்மன் கோவில் அருகே கவுண்டன்யா மகாநதியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் விழா நடைபெறும் மேடை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார், குடியாத்தம் எம்எல்ஏ அமலு மற்றும் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி