வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை சுபேதார் நகரை சேர்ந்த அக்பர் சமையல் தொழிலாளி. இவர் மனைவி சாயிதா(வயது34). பிள்ளைகளுடன் இதே பகுதியை சேர்ந்த காதர் என்பவரின் பயணியர் ஆட்டோவில் குடியாத்தத்தில் இருந்து வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது குடியாத்தம் வேலூர் சாலையில் வேப்பூர் அருகே ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் சாயிதா (வயது34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திலிருந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டனர். மேலும் காயங்களுடன் இருந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சிறுவனை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.