வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்

54பார்த்தது
வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால், பல கோழிகள் இறந்துள்ளன. ஆந்திராவின் அண்டை மாநிலமாக உள்ள தமிழகத்தில் நோய் பரவாமல் இருக்க தமிழக ஆந்திர மாநில எல்லைகளில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நோய் தடுப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி மற்றும் பத்தல பள்ளி ஆகிய மூன்று எல்லைகளில், ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் கோழிப்பண்ணை வைத்துள்ளவர்கள் கோழிகளுக்கு ஏதேனும் நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி