அரக்கோணம் நகராட்சி வருவாய் உதவியாளராக ஆதாம் ஷெரீப் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை நேருஜி நகர் ஐந்தாவது தெரு முதல் குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் வரி வசூலிக்க சென்றபோது அங்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து வருவாய் உதவியாளருக்கு ஆதரவாக நகராட்சி ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்றது.