கனடா நாட்டின் 24ஆவது பிரதமராக லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி பதவி ஏற்றுக் கொண்டார். தலைமை பதவிக்கான போட்டியில் 85.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மார்க் கார்னி பிரதமராக தேர்வாகி இருந்தார். பிரதமர் மார்க் கார்னி 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை கனடாவின் 8ஆவது ஆளுநராக பணியாற்றியவர். முன்னாள் கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி 7ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.