கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் பெண் பூனையின் பின்னால் ஆண் பூனை சுற்றி வந்ததால் அண்டை வீட்டுக்காரர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. இதில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூனைகளுக்காக இரு குடும்பத்தினர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.