சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ஸ்பேஸ் X-ன் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்து வரும் சுனிதாவை அழைத்து வர, இந்த விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷ்யாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் பயணம் செய்துள்ளனர். முன்னதாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.