அரக்கோணம் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

77பார்த்தது
இச்சிப்புத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28ஆம் தேதி தொழிற்சாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். எந்தவித தீர்வும் ஏற்படாத நிலையில், இன்று மீண்டும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி