தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரக்கோணம் தக்கோலத்தில் இயங்கி வரும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 300 வீரர்கள் கனமழை முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடுவதற்காக தயார் நிலையில் உள்ளனர். மரம் அறுக்கும் கருவி, நவீன ரப்பர் படகுகள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மையம் இன்று அறிவித்துள்ளது.