மகாராஷ்டிர மாநிலம் ஹிராநந்தனி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இயங்கி வந்த ஹைடெக் விபச்சார கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். திரையுலகில் பணிபுரியும் 4 மாடல் அழகிகளை மீட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஷியாம்சுந்தர் அரோரா (60) என்பவர் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் பேரில் வாடிக்கையாளர்கள் போல சென்று இந்த கும்பலை பிடித்துள்ளனர். ஒவ்வொரு மாடல் அழகிக்கும் ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூலித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.