
தி.மலை: அரசு பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மாதிமங்கலம்-கீழ்தாமரைபாக்கம் செய்யாற்றின் குறுக்கே ரூபாய் 15.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்து, புதிய வழித்தடத்தில் அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி. சரவணன், ஒ. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், வருவாய்க் கோட்டாட்சியர் ராஜ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிருஷ்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர்கள் வடிவேலன், வேல்முருகன், உதவித் திட்ட அலுவலர் சஞ்சீவி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.