திருவண்ணாமலை மாநகராட்சியில் அருள்மிகு அருணாச்சலேசுவரா் திருக்கோயிலின் மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு இன்று (14. 02. 2025) குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், இ. ஆ. ப. , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.