தமிழக பாஜக சார்பில், திமுக அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை யில் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்தும் , கிரிவல பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் இன்று பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் நகர தலைவர்கள் சந்தோஷ் பரமசிவம், மூவேந்தன், முன்னாள் பொருளாளர் சுரேஷ், பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.