ஜவ்வாது மலையில் காட்டுத்தீ; மக்கள் கோரிக்கை

85பார்த்தது
ஜவ்வாது மலையில் காட்டுத்தீ; மக்கள் கோரிக்கை
போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த தீ மளமளவென அதிகரித்து வருவதால் அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 

அடர்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதால் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஜவ்வாது பகுதியில் 205 மலைக் கிராமங்கள் உள்ளன. 

ஜவ்வாது மலை அமைந்துள்ள பகுதி மிக நீண்ட கிழக்குத் தொடர்ச்சி வனப்பகுதி ஆகும். இந்த கிழக்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் யானை, கரடி, மான், காட்டெருமை மற்றும் அரிய வகைப் பாம்புகள் மற்றும் அரிய வகைப் பறவைகள் அதிகளவில் உயிர்வாழ்ந்து வருகின்றன. அத்துடன், இந்த வனப்பகுதியில், அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி