திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை செல்லும் இலவச பேருந்து சேவையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.
உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, அருணை கல்விக்குழுமத்தின் துணை தலைவர் எ. வ. வே. குமரன், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.