திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 125-ஆம் ஆண்டு விழா, மலர் வெளியீட்டு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா என முப்பெரும் விழாவில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் மருத்துவர். எ.வே.வே. கம்பன் கலந்துக் கொண்டு திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு மலரை வழங்கி வாழ்த்துரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், அரசு வழக்கறிஞர் நா. சீனிவாசன், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.