கலசப்பாக்கம்: விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா; திருமாவளவன் பங்கேற்பு

83பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோணை தலைமையில் நடைபெற்றது. 

இதில் திருவண்ணாமலை மைய மாவட்ட செயலாளர் வளர்மதி வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் , சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்தும் சக அரசியல் கட்சிகள் அவர்களுடைய முன்னெடுப்புகளின் முகமூடிகளை அவிழ்த்து ஜனநாயக கடமைகளை அதன் தன்மைகள் குறித்து உரையாற்றினார். 

உடன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி