திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் காவல் நிலைய கல்வெட்டினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. எம். சுதாகர், இ. கா. ப. , மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.