
திருவண்ணாமலை: முதல்வர் மருந்தகத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், ஆதமங்கலம் புதூர் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி கிராமத்தில் முதல்வர் மருந்தகத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கலசப்பாக்கம் புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், சுந்தரபாண்டியன், வழக்கறிஞர் சுப்பிரமணி ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், அன்பரசி ராஜசேகர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.