ஆரணி - Arani

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ரூ. 2.40 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ரூ. 2.40 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆ. வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் டெங்கு மஸ்தூர்களுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து தொகுப்பு ஊதியம் மற்றும் தினக்கூலித் தொகை ரூ. 11 லட்சத்து 96 ஆயிரம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு ரூ. 5 லட்சத்து 37 ஆயிரம், கொளத்தூர் ஊராட்சியில் பழைய காலனிப் பகுதியில் கால்வாய் அமைத்தல் பணி, காமக்கூர் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடம் சீரமைத்தல் பணி,  வண்ணாங்குளம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் அமைக்கும் பணிகளுக்கு ரூ. 6 லட்சம், கொளத்தூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் பக்கக் கால்வாய் அமைத்தல் பணிக்கு ரூ. 5 லட்சம், புங்கம்பாடி ஊராட்சி ஏரிப் பகுதியில் சிறு பாலம் அமைத்தல் பணிக்கு ரூ. 5 லட்சம் ஒதுக்கியும், ஒன்றிய பொதுநிதியில் இருந்து பல்வேறு கிராமங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ. ஒரு கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் ஒதுக்கியும் என சுமார் ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

வீடியோஸ்


திருவண்ணாமலை