மிராக்கிள் புரூட் என்ற ஆங்கிலப் பெயரைக் கொண்ட ’அதிசய பழம்’ குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டோம். இது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. 15 அடி உயரம் வரை அதிசய பழத்தின் மரம் வளரும். இந்த பழத்தில் ‘மிராகுலின்’ என்ற கிளைகால் வகை புரோட்டின் சத்து உள்ளது. மேலும் பல வகையான அமினோ அமிலங்களும் இருக்கின்றன. புரோட்டினும், அமினோ அமிலமும் சேர்வதால் இனிப்பு சுவையின் தித்திப்பை நாவிற்கு தருகிறது.