திருச்செங்கோடு - Thiruchengodu

திருச்செங்கோடு: கனமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோடு: கனமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோட்டில் கடந்த இரு நாள்களாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டாா். திருச்செங்கோடு நகரின் தாழ்வான பகுதிகளான சக்திவேல் நகா், சாணாா்பாளையம், சட்டையம்புதூா் சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் சாலைகளில் ஆறு போல ஓடியது. வடிகால்கள், கழிவுநீா்க் கால்வாய்கள் நிரம்பி தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்கூடங்களில் மழைநீா் புகுந்து தேங்கியது. நாள்முழுவதும் வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் மழைநீா் தேங்கி நின்ால் குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். தகவல் அறிந்த ஈஸ்வரன் எம்எல்ஏ அந்தப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி நிா்வாகத்தினா் சீரமைத்து மழை நீரை அகற்றி தண்ணீா் தேங்குவதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தர தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின் போது, நகராட்சி துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக மாவட்டச் செயலாளா் ராயல்செந்தில், நகரச் செயலாளா்கள் சேன்யோகுமாா், அசோக்குமாா், நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా