திருச்செங்கோடு: டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

64பார்த்தது
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் பட்டறைமேடு பகுதியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு கலந்துகொண்டு தொடங்கி வைத்தாா்.

இதில் அப்பகுதி மக்களை சென்றடையும் வகையில் தண்டோரா அடித்து டெங்கு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். பட்டறைமேடு பகுதியில் பழுது நீக்குவதற்காக வரும் வாகனங்களின் டயா்களை கழற்றி வைக்கும் போது மழைநீா் புகுந்து டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் பாதுகாக்க வேண்டும், தினசரி உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சிப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து தேவையற்ற பொருள்களை அகற்றி டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என தண்டோரா, துண்டுப் பிரசுரங்கள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி