சென்னையில் பல பகுதிகளில் நேற்று (அக். 14) இரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பின்னர் நள்ளிரவுக்கு மேல் மழை பொழியவில்லை. இந்த நிலையில் இன்று (அக். 15) அதிகாலை முதல் கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.