திருச்செங்கோட்டில் சுமார் 30 நியாய விலை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இந்த மாதம் ஐந்தாம் தேதி வரை பருப்பு மற்றும் எண்ணெய் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சில கடைகளில் இவற்றை வழங்கவில்லை என நகராட்சி தலைவர் நளினி சுரேஷ் பாபுவிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி பகுதியில் இருக்கும் நியாய விலை கடைகளை நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.