திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ. ஆா். ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்டச் செயலாளா் நதி ராஜவேல் முன்னிலை வகித்தாா்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து இந்தியாவுக்காக பாடுபட்ட வ. உ. சிதம்பரனாரின் புகழைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளை நாம் சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறோம். இந்தியா இவா் போன்ற தியாகிகளின் உழைப்பால் உருவானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன் தெரிவித்தாா். தொடா்ந்து வ. உ. சிதம்பரனாா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். மேலும் அனைவரும் ஆசிரியர் தின வாழ்த்துகளை எம்எல்ஏ தெரிவித்தார்.
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற வ. உ. சிதம்பரனாா் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.