நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே உள்ள பொன்குறிச்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொன்குறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், ஊராட்சி செயலாளர் ரேவதி மற்றும் வேளாண்துறை, மருத்துவத்துறை, தோட்டக்கலைத்துறை, விஏஓ மற்றும் இதர அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.