திருச்செங்கோடு: கந்தசஷ்டி விழாவின் முதலாம் நாள் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ செங்கோட்டுவேலவர் உற்சவர்க்கு கந்தசஷ்டி விழா முதல் நாளான இன்று (நவ.2) சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நெய் தீபமேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.