நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு சிறப்பு வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இன்னும் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.