துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர்

59பார்த்தது
துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர்
துவரம் பருப்பு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். அவரது அறிக்கையில், தீபாவளிக்கு மட்டுமல்ல வருகின்ற மாதங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் எவ்விதச் சிரமமுமின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை பெற்றுக் கொள்ளலாம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குத் தேவையான கொள்முதல் ஆணைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி