பல்லடம்: மனைவியின் உயிரை காப்பாற்ற போராடும் கணவர்
பல்லடம் ஆறாக்குளத்தில் மனைவி விஜயலட்சுமி உடன் வசித்து வருபவர் வேலுச்சாமி. 2022ம் ஆண்டு மனைவியின் மனநல மாற்றத்திற்காக விஜயலட்சுமியை பல்லடம் மாணிக்காபுரத்தில் அண்ணன் வேலுச்சாமி வீட்டில் தங்க வைத்தார். விஜயலட்சுமி தந்தை சுப்பையாவிற்க்கு 3. 5 ஏக்கர் நிலம் இருந்தது. நிலத்தில் வேலுச்சாமி, விஜயலட்சுமி சரிபாதி பங்கு உள்ள நிலையில் மனநலம் பாதித்த நிலையில் தன் வீட்டிற்கு வந்த தனது தங்கை விஜயலட்சுமியை ஏமாற்றி வேலுச்சாமி முழு நிலத்தையும் கடந்த 2022 தனது பெயரில் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. மனைவிக்கு வர வேண்டிய சொத்தை ஏமாற்றி எழுதிய வாங்கியதாக கூறப்படும் செய்தி சில மாதங்களுக்கு பின் வேலுச்சாமிக்கு தெரிய வர இதுகுறித்து மைத்துனரிடம் நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிமுக பிரமுகர் மற்றும் மாணிக்காபுரம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான சண்முகசுந்திரம் என்பவர் நான் அதிமுக கட்சியில் உள்ளேன் இந்த தொகுதி எம்எல்ஏ பக்க பலமாக இருக்கிறார் சொத்தில் பங்கு கேட்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. வேலுச்சாமி சொத்தை மீட்டு கொடுக்க கூறி பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்து போலீசார் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கததால் மாவட்ட ஆட்சியரிடம் மனைவியின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் வேலுச்சாமி, சண்முகசுந்தரம் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தரக்கோரி கோரிக்கை வைத்தார்.